Monday, August 29, 2011

லோக்பால் மசோதாவுக்காகப் போராடுபவர்களின் சிறுபிள்ளைத்தனம் பிரதாப் பட்நாயக்



நமது அரசியலின் ஜனநாயக அடிப்படையையே அழித்தொழிக்கும் சினிசிஸத்தை(வெறுப்பு மனோபாவத்தைவளர்தெடுக்கிடுறது ஊழல் என்பதை நாம் யாரும் மறுக்க முடியாதுஊழல் அனைத்து மூலாதாரங்களையும் ஏழைகள் அணுக முடியாதபடி பறித்து விடுகிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாதுஆகவே தகுதிவாய்ந்த லோக்பால் மசோதா மூலம் ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்எந்த மாற்றுக் கருத்தும் இல்லைதான்ஆனால் தற்போது ஊழலுக்கு எதிராக கிளம்பியுள்ள கூச்சலும் குழப்பமும் தவறான அடையாளத்தை உருவாக்கியுள்ளது என்ற கருத்துதவிர்க்க முடியாதபடி உருவாகியுள்ளது:உண்மையில் ஊழலுக்கான காரணமென எதை நாம் அடையாளப்படுத்துகிறமோ,அது உண்மையிலேயே நமது வீட்டுக்குப் பதில் வேறு வீட்டுக்கதவைத் தட்டுவதற்கு ஒப்பாகும்.
anna_hazare_ramdev_253ஒரு குறிப்பிட்ட சொத்துடமை சமூகத்தில் நடக்கும் ஊழலுக்கும்ஒரு சொத்துடமை சமூகம் மாறும்போது,அதனுடன் சம்பந்தப்பட்ட ஊழலுக்கும் உள்ள வேறுபாட்டை உற்றுப் பார்க்க தெரிந்திருக்க வேண்டும்சில சரக்குகளை அதனுடைய மதிப்பை விட குறைவான விலைக்குச் சிலருக்குக் கொடுக்கும்போது ஊழல் நடக்கிறதுஅப்படிச் செய்வதில் ஒன்றும் பெரிய தவறில்லைதான். சில குறிப்பிட்ட பொதுச்சேவைகள் அனைவருக்கும் இலவசமாகத் தரப்படுகிறதுஉணவுப்பொருட்களைப் போன்ற சில முக்கிய சரக்குகளின் விலையை வேண்டுமென்றே வெகுவாகக் குறைத்து(அவைகளின் விற்பனை விலை சந்தை விற்பனை விலையை விட மிகக் குறைவாக இருக்கும்), ரேஷன் முறைப்படி விநியாகிக்கப்படுகிறதுஇந்த மாதிரி நிகழும்போதுஊழலுக்கான வாய்ப்புகள் எழுகின்றன. இலவசமாக ஒரு சிலருக்குக் கிடைக்கும் பொதுச்சேவையைப் பெறுவதற்குஅப்படிப் பெற முடியாதவர்கள் இலஞ்சம் கொடுத்து பொதுநலத் துறை அதிகாரியிடம் இருந்து பெற முயலலாம்அதுபோல ரேஷனில் உணவுப் பொருட்களைக் வழங்குபவர்கள்,ஏதாவது 'கைக்கூலிவாங்கிக் கொண்டுதாங்கள் வழங்கும் பொருட்களின் வழிமுறைகளை மாற்றிக் கொடுத்து ஏமாற்றலாம்.
மேற்சொன்ன ஊழல்கள் மத்தியத்துவப்பட்ட சமூகத்தில் வழக்கமாக நடப்பவை.மத்தியத்துவப்பட்ட சமூகத்தில் முதலீட்டு வாய்ப்புகள் லைசன்ஸ் முறைப்படி கட்டுப்படுத்தப்படுகிறதுஅதுபோல மானியப்படுத்தப்பட்ட நிதியும் கட்டுப்படுத்தப்படுகிறதுஆகவே என்னதான் 'தாராளமயம்ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தாலும்அந்த சமூக விலையைக் கொடுத்துதாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதுதான் மத்தியத்துவப்பட்டட சமூகத்தின் ஊழலைக் குறைக்க முடியும் என்ற கருத்து ஏற்பட்டு விட்டதுஆனால் விளங்காத புதிராக'தாராளமய'த்தின் மூலம்ஊழல் முன் எப்போதுமில்லாதபடி பல மடங்குப் பெருகிப் போனதுஇதற்குக் காரணம் 'தாராளமயம்என்பது போதுமான அளவுக்கு'தனியார்மய'மாக்குதலுடன் சம்மந்தப்பட்டு இருந்தது என்பதுதான்இது ஒருவகையான சொத்துடமை சமூக மாற்றத்திற்கு வழிவகை செய்ததுஒரு வாதத்திற்காக 'தாராளமயம்', பழைய சொத்துடமை சமூகத்தில் இருந்த பழைய மாதிரியான ஊழல்களை உண்மையிலேயே குறைத்தது என்று வைத்துக் கொண்டாலும்தற்போது 'தனியார்மயம்சொத்துடமை சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் மூலம்புதுவகையான ஊழல்களுக்கான வாய்ப்புகள் பல்கிப் பெருகியுள்ளன.
தனியார்மயத்தில் கூடசரியான விலையில் தனியார்மயப்படுத்துதல் நடந்தால்,ஊழலுக்கான வாய்ப்புகள் இல்லவே இல்லைஅது போல அரசின் சொத்துகள் நியாயமாக ஏலம் விடப்பட்டு அதிகமாக விலை கேட்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் கூடஅந்த மாதிரி வழிமுறைகளில் யார் எந்தவித ஆட்சேபங்களைத் தெரிவித்த போதிலும்யாரும் எந்த பெரும் ஊழலும் நடந்து விட முடியும் என்று எதிர்பார்க்க முடியாதுஆனால் மூன்றாம் உலகில் நடந்த அனைத்து தனியார்மயமாக்குதலும் நவீன தாராளமயத்துடன் இயைந்து அனைத்தும் தூக்கிப்போடப்படும் குறைந்த விலையில் விற்கப்பட்டதுஇது கண்டிப்பாக நியாயமான ஏல விற்பனையில் கிட்டுவதைக் காட்டிலும்மிகவும் சொற்பமான விலையாகும்உண்மையில் பிரெட்டன் வுட்ஸ் அமைப்புகள் மூன்றாம் உலக நாடுகளுடன் சேர்ந்து கொண்டுநவீன தாராளமயத்தைத் துவங்கி வைத்துபொதுச் சொத்துகளைத் தூக்கி எறியும் சொற்ப விலைக்குதான் விற்க முடியும் என்று வேண்டமென்றே மாயையை ஏற்படுத்தி ஏமாற்றி தனியார்களுக்கு விற்றதுநமது நாட்டிலும் கூடஇந்த மாதிரி சொற்ப விலைக்குத் தனியாருக்கு விற்று தாரை வார்த்த உதாரணங்கள் ஏராளமாக உண்டுபாரத் அலுமினியம் கம்பெனியில் இருந்துமும்பை சென்டாயூர் ஒட்டல் வரை பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். (சென்டாயூர் ஓட்டலை விற்ற குறுகிய காலத்திலேயேஅதை விட பெரும் தொகைக்கு அது மறுபடியும் விற்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.)
லைசன்ஸ் ரேஷன் முறை நடைமுறையில் இருந்தபோதுபொதுச் சொத்தைக் குறைந்த விலையில் விற்கும்போது அது சலுகை பெற்ற சிலருக்கு வழங்கப்படும்;அந்தச் சலுகைகளுக்காக அவர்கள் லஞ்சம் தர தயாராக இருந்தார்கள்ஆனால் இப்போது பொங்கி எழுந்துள்ள ஊழல்தனியார்மயத்தின் விளைவால் எழுந்தவை.அதாவது சமூகம் தாராளமயத்தின் மூலம் ஏற்பட்ட தனியார்மயத்தின் விளைவாய் ஏற்பட்டது. (தாராளமய யுகத்தில் பணம் பண்ணுதல் என்ற கலாச்சாரம்சமூக அந்தஸ்தைப் பெற்றுள்ளது)
தனியார்மயமே ஊழலால்தான் ஊக்கம் கொடுக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது என்று சிலர் வாதிடலாம்அதாவது லஞ்சம் வாங்குவதிலுள்ள தீராத பசியே,பொதுத்துறை அலுவலகர்களை அரசு சொத்தைத் தனியார்மயப்படுத்தத் தூண்டுகிறது என்பதுதான் அவ்வாதம்இதை அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள முடியாதுஉண்மையில் தனியார்மயப்படுத்தலுக்கான வலியுறுத்தல் சர்வதேசநிதியில் இருந்து வருகிறது. (சமீபத்தில் நடந்த கிரேக்க சிக்கனத் திட்டம் அதை உறுதி செய்கிறதுலஞ்சம் பொதுத்துறை அலுவலகர்களுக்குத் தூண்டிலாய் போடப்பட்டுஅவர்கள் வழிக்குக் கொண்டு வரப்படுகிறார்கள்இதுபோல இந்த உண்மைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கிடந்தாலும்,இதிலிருந்து இரண்டு முடிவுகளை மட்டும் திட்டவட்டமாக எடுக்கலாம்மக்களை மோசமாக பாதிப்பது என்பது தனியார்மயத்துடன் சம்பந்தப்பட்ட ஊழல் கிடையாது,ஆனால் தனியார்மயமே பாதிக்கிறதுஇரண்டாவதாக இந்த தனியார்மயத்தை தடுத்து நிறுத்தாவிட்டால்எந்த லோக்பால மசோதா வந்தாலும்மக்களுக்குப் பெரிதாக எதுவும் உதவிட முடியாதுஅரசின் கருவூலம் உறிஞ்சப்படுவதை,தனியார் மயத்தை நிறுத்தாமல் தடுக்கமுடியாது.
உதாரணத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள்அரசு ஏலம் விடும் வழிமுறையைத் தேர்ந்தெடுக்காததால்கருவூலத்திற்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் வெவ்வேறு மாதிரி கணக்கிடப்பட்டுள்ளனநாம் அடிக்கடி குறிப்பிடும் எண்ணான 1,76,000 கோடி ரூபாய் என்பதை ஒரு விவாதத்திற்காக எடுத்துக் கொள்வோம்அப்படி என்றால் இந்தத் தொகைதான் மக்கள் இழந்த தொகையைப் பிரதிபலிக்கிறதுமக்களின் நலனுக்காகச் செலவழிக்கபட்டிருக்க வேண்டிய பணம்தனியார் சட்டைப்பைக்குள் சென்று விட்டது.
இதில் அமைச்சர் எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பணமும் அடக்கம்மீதமுள்ள தொகை எந்த குறிப்பிட்ட நபர்களின் சட்டைப்பைக்குள் சென்றது என்பதை இனிதான் கண்டு பிடிக்க வேண்டும்ஆனால் இந்த லஞ்சத்தொகை என்பது மக்களுக்கு எந்தவிதத்திலும் கூடுதல் சுமையாகக் கருத முடியாது என்பது உண்மைதான்ஆனால் எந்த லஞ்சமும் வாங்கப்படவில்லை என்றால்முதலில் வருபவர்களுக்கு முதலில் சேவை வழங்கும் முறையை மிகவும் கெடுபிடியாகவும் மனசுத்தியுடனும் அமுல் செய்துஏலம் விடும் முறையை முழுவதுமாய் காற்றில் பறக்க விட்டுஎன்ன விலைக்குப் போக வேண்டுமோ அதைவிட 1,76,000 கோடி குறைந்த விலைக்கு விற்றிருப்பார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறதுசுருக்கமாகச் சொன்னால்,தனியார்மயமாக்குதலுடன் சம்பந்தப்பட்ட ஊழல் என்பது மக்களிடம் இருந்த எவ்வளவு களவாடப்பட்டது என்பதை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறதே தவிர,அதிலே செலவாணியான இலஞ்சத்தை வைத்துத் தீர்மானிக்கப்படவில்லை.இதிலிருந்து தனியார்மயத்துடன் சேர்ந்த போகிற ஊழலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டிலும்தனியார்மயத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே சரியான முடிவாக இருக்கும்.
தூக்கி எறியக்கூடிய சொற்ப விலையில் தனியார் மயம் நடந்து கொண்டிருக்கிற வரையில்ஊழலே வெளிப்படையாகத் தெரியா விட்டாலும்மக்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும்எந்த வலுவான லோக்பால் மசோதா ஏற்றப்பட்டாலும்இது எதையும் கட்டுப்படுத்தப் போவதில்லைஊழல் தடுப்புச் சட்டம் 1988-யை அடிப்படையாகக் கொண்டு வரைவு செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவின்படிஊழல் என்பதற்கான வரையறை கீழ்கண்டவாறுஒரு பொதுநல அலுவர் ஒரு சேவையைச் செய்து கொடுப்பதற்குத் தனது சட்டப்பூர்வமான சம்பளத்திற்கு மேல் பெறும் 'இலஞ்சம்தான்' (இந்த இலஞ்சம் கண்டிப்பாக பணமாகதான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லைஊழலாகும்.
இந்த நவீன தாராள‌மய யுகத்தில்மூன்றாம் உலகில் தூக்கி எறியக்கூடிய குறைந்த விலைக்கு தனியார்மயப்படுத்தல் நடக்கும்போதுஇந்த மாதிரி இலஞ்சம் வழங்குதல் நடக்காதபோது இந்த ஊழல் லோக்பால் மசோதாவின் எல்லைக்குள் வரவே வராதுஉண்மையில் அப்போது தனியார்மயபடுத்தலினால்தான் மக்களுக்கு நஷ்டம் ஏற்படுவதே ஒரு ஊழல்தான்அதற்குள் இந்த லோக்பால் மசோதா தலையிட்டுமக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை தடுக்கவே முடியாது.
இந்த ஜீ அலைக்கற்றை ஊழலை எடுத்துக் கொள்வோம்ஏதாவது சில பொது அலுவலர் அதில் ஏதோ ஒரு வகையில் இலஞ்சம் வாங்கி இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டால்தான்லோக்பால் அதற்குள் தனது கொடுக்கை நீட்ட முடியும்.இல்லையெனில் அரசின் கருவூலத்திற்கு அல்லது மக்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்பது அப்படியே நஷ்டமாகத்தான் இருக்கும்யாரும் எதுவம் செய்ய முடியாது.ஆனால் தற்போது ஆடிட்டர் ஜெனரலாவதுஏதோ சில கண்டனங்களை முன் மொழிந்துள்ளார்இருப்பினும் அவரது கண்டனங்கள் எந்தவகையிலும்இந்த கொள்கைகளை மாற்றப் போவதில்லைஅரசு மட்டும் அவரது கண்டனங்களை கணக்கில் எடுத்துக் கொண்டுஇந்தக் கொள்கைகளை மாற்றி இருந்திருந்தால்,இவ்வளவு காலத்திற்கு இந்த நவீன தாராள‌வாத ராட்சிசயம் மூச்சு விட்டுக் கொண்டுஉயிர் வாழ்ந்திருக்காது.
பொது சொத்தைதூக்கி எறியப்படும் குறைந்த விலைக்கு வாங்குவதுதான்,மார்க்ஸ் கூறும் 'புராதான மூலதன சேர்மானத்திற்கானசிறந்த உதாரணமாக அமைந்திருக்கக் கூடும்தனியார்மயத்துடன் சம்பந்தப்பட்ட ஊழல் என்பது அளவில் குறைவானதுதான்புராதான மூலதனத்திற்காக ஒருவரிடம் இலஞ்சம் வாங்கும் ஒரு பொது அதிகாரியின் இலாபம் என்பதுஏற்பட்டுள்ள புராதான மூலதன சேர்மானத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகவும் சொற்பமானது.பொது அதிகாரி பெற்ற இலஞ்சம் என்பதுமக்கள் கருவூலத்திற்கு இதனால் ஏற்பட்ட நஷ்டத்துடன் ஒப்பிட்டால்அது கருவூல நஷ்டத்திற்குப் போடப்பட்ட வரி போல் சொற்பமாகதான் இருக்கும்ஆகவே இந்த மாதிரி பொது அதிகாரி பெறும் இலஞ்சத்தை ஒழிப்பதால் மட்டுமேமக்களது நிலையை மேம்படுத்தி விட முடியாதுஇந்த இலஞ்சத்தை ஒழிப்பதால்புராதான மூலதன சேர்மானத்தை ஓரளவுக்கு மட்டுப்படுத்தலாம் என்ற அளவில் மட்டுமே அது முக்கியத்துவம் பெறுகிறதுஉண்மையிலேயே தேவையானது எதுவென்றால்தனியார்மயம் மூலம் ஏற்படுத்தப்படும் புராதான மூலதன சேர்மானம் ஒழிக்கப்பட வேண்டும்.
வெறுமனே ஊழலை மட்டுமே மையப்படுத்திப் பார்த்தல் என்பது, தவறான அடையாளப்படுத்தலுக்கு மட்டுமே கொண்டுச் செல்லும். நவீன தாராளமய இராட்சிசயத்துடன் தவிர்க்கவே முடியாத அம்சமாக, இணைக்கப்பட்டுள்ள இந்த தனியார்மயத்தின் வழிமுறைகள், "புராதான மூலதன சேர்மானத்திற்கான" ஒரு வடிவத்தைதான் ஏற்படுத்தி தருகிறது. 1988ம் வருடத்திய சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள அனைத்து ஊழல்களையும் களைந்தாலும், இந்தப் புராதான மூலதன சேர்மானம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். ஆகவே ஊழலுக்கு எதிராக அக்கறையுடன் போராடுபவர்கள், பொதுசொத்தை தனியார் மயப்படுத்துவதை நிறுத்தக் கோர வேண்டும்; அல்லது அப்படியே தனியார் மயப்படுத்துவது தவிர்க்க முடியாதது என்றால், ஏல முறையைத் தவிர மற்ற முறையைக் கையாளாமல் இருக்க வேண்டும்; இப்படிப் போராடினால்தான், வலுவான லோக்பால் மசோதாவை ஏற்படுத்துவதுடன், மக்களின் நலனில் அக்கறையுடன் போராடுபவர்கள் என்று அவர்கள் கோருவதற்கு கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும்.
ஊழல் குறித்து இவ்வளவு சத்தமாகப் பேசி விட்டு, "புராதான சேர்மானத்துடன்" பின்னிப் பிணைந்துள்ள தனியார்மயமாதல் குறித்து செவிட்டு அமைதியுடன் இருப்பது, ஊழல் எதிர்ப்பு அறப்போராளிகள் நவீன தாராளவாத்தை எதிர்கொள்ளுவதற்குப் பதிலாக, அறிவுஜீவித சிறுபிள்ளைத்தனத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

தமிழில் சொ.பிரபாகரன்



Sunday, August 28, 2011

தை - தமிழ்ப் புத்தாண்டு - மதச்சாயமோ அரசியல் சாயமோ பூசாதீர்கள்..


               சமச்சீர் கல்விக்குப் பிறகு, தமிழக சட்டமன்றத்தில் பிறந்து இரண்டே ஆண்டுகள் ஆன தை - தமிழ்ப் புத்தாண்டு திமுகச் சாயமும் மதச்சாயமும் பூசப்பட்டு  பலியிடப்பட்டது. இப்போதெல்லாம் தமிழக சட்டமன்றம் திமுக ஆட்சிக் காலத்து ஆடுகளை பலிகொடுக்கும் பலிபீடமாய் மாறிவிட்டது. தினமும் சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் சட்டமன்றத்திற்குள் நுழையும் போதெல்லாம் இன்றைக்கு எந்த ஆடு பலியாகப் போகிறதோ என்று ஒரு மிரட்சியுடன் தான் உள்ளே நுழைகிறார்கள். 
                        அப்படித் தான் திமுக ஆட்சிக்காலத்தில் 2008 - ஆம் ஆண்டில் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்ட தை - தமிழ்ப் புத்தாண்டு என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் இன்னொரு சட்டத்தின் மூலம் சித்திரை - தமிழ்ப் புத்தாண்டாக மாற்றிவிட்டனர். அதற்கு முதலமைச்சர் சோதிடம், வானசாஸ்திரம், மதம் போன்ற அறிவியலுக்கோ வரலாற்றுக்கோ பொருந்தாத சான்றுகளை அள்ளி வீசி, திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதியின் சுய விளம்பரத்திற்காக தமிழ்ப் புத்தாண்டு  என்பது தை முதல் நாளாக மாற்றப்பட்டது என்று கூறி ''சுவாஹா'' என்று முடித்து விட்டார்.
                தை - தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பதற்கான நியாயமான சான்றுகள் கடந்த கால வரலாற்றிலும், இலக்கியங்களிலும் உள்ளன என்பதை தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
                தமிழ்நாட்டில் 2008க்கு முன்பும் வழக்கத்தில் இருந்த சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்பகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர். பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை தமிழ்மக்களிடம் பழக்கத்தில் வந்துள்ளது. இந்த ஆண்டு கணக்கீடு பற்சக்கர முறையில் அமைந்துள்ளது. அறுபது ஆண்டுகள் ஒரு சுழற்சியாக கருதப்படுகிறது. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை என்பது தமிழறிஞர்களின் வாதம்.
              இதையொட்டி குமரிக் கண்டமாக தமிழர் நிலப்பரப்பு பரந்து விரிந்திருந்த காலம் தொட்டே தை முதல் நாளே தமிழர்கள் புத்தாண்டாக கொண்டாடினர் என்று கூறி, தனித் தமிழர் இயக்கத் தலைவர் மறைமலை அடிகளும் 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களும் புலவர்களும் வரலாற்று ஆசிரியர்களும் ஒன்று கூடி விவாதித்து, கடந்த 1921-ம் ஆண்டில் அறிவித்தனர். இந்த அறிவிப்பை 1971ம் ஆண்டு ஆட்சியிலிருந்த தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.
            அப்போதிலிருந்து தமிழர்களின் ஆண்டு என்பது திருவள்ளுவரின் பிறப்பை (இயேசு கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் திருவள்ளுவர் என்கிறது தமிழ் வரலாறு) மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டது. தமிழக அரசுத் துறை சார்ந்த அனைத்து ஆவணங்களிலும் திருவள்ளுவராண்டும், தை முதல் நாளை மையப்படுத்திய புத்தாண்டு முறையும் நடைமுறையிலிருந்தது. அரசிதழிலும் இது வெளியாகியுள்ளது. தை முதல் நாள்தான் புத்தாண்டு என்று தமிழக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது

 பண்டை காலத்திலேயே தை புத்தாண்டு :

                   உலகில் பூர்வகுடி மக்களாக சில ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் குமரி கண்டம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு வாழ்ந்த தமிழர்கள் இயற்கையை வணங்கி வந்தார்கள். மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை  என  இவை தான் மாறி மாறிப் பருவக் காலங்களாக  மனிதனை ஆண்டு வந்ததால்,  தமிழன் ''ஆண்டு'' என்று அழைத்தான் என்று சொல்லப்படுகின்றது.  மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் முன்னதானது  என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும், சங்க  நூல்களிலும் காணப்படும் வானியல்  செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்று கூறப்படுகின்றது. ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரே தமிழர்கள் வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.  பண்டையத் தமிழர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள்  சூரியன் மற்றும் சந்திரன்  ஆகியவற்றின் இயக்கத்தையும் பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் இயற்கையை  ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழர்களின் கால பகுப்பு :

பொழுது, நாழிகை :   

"வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு,மாலை, யாமம்" என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பகுத்திருந்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.
  1 நாழிகை- 24 நிமிடங்கள்
60 நாழிகை-1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440நிமிடங்கள்-24 மணித்தியாலங்கள்
24மணித்தியாலங்கள்-1 நாள்
இவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் அச்சொட்டாகப் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறைமை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பருவ பகுப்பு

தமிழன் காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான்.
1.இளவேனில்-தை - மாசி மாதங்கள்
2.முதுவேனில்-பங்குனி - சித்திரை மாதங்கள்
3.கார்-வைகாசி – ஆனி மாதங்கள்
4.கூதிர்-ஆடி - ஆவணி மாதங்கள்
5.முன்பனி-புரட்டாசி – ஐப்பசி மாதங்கள்
6.பின்பனிகார்த்திகை - மார்கழி மாதங்கள்

தமிழர்களின் ஆண்டு பகுப்பு                                            

  • 2 கண்ணிமை - 1 நொடி
  • 2 கை நொடி - 1 மாத்திரை
  • 2 மாத்திரை - 1 குரு
  • 2 குரு - 1 உயிர்
  • 2 உயிர் - 1 சணிகம்
  • 12 சணிகம் - 1 விநாடி
  • 60 விநாடி - 1 நாழிகை
  • 2 1/2 நாழிகை - 1 ஓரை
  • 3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்
  • 2 முகூர்த்தம் - 1 சாமம்
  • 4 சாமம் - 1 பொழுது
  • 2 பொழுது - 1 நாள்
  • 15 நாள் - 1 பக்கம்
  • 2 பக்கம்(30 நாள்) - 1 மாதம்
  • 6 மாதம் - 1 அயனம்
  • 2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு
  • 60 ஆண்டு - 1 வட்டம்
-என்று தமிழர்களால் தெறிப்பளவு (Time Measure) முறையில் ஆண்டுகள் கணக்கிடப்பட்டு வந்துள்ளன

அறிஞர்கள் பார்வையில் தமிழ் புத்தாண்டு

               பண்டையத் தமிழர் தம் தாய் மொழியாக தமிழையும், தமது நாகரீகத்தையும், தம் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை, தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.
இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியினரான உலகின் மூத்த தமிழ்க் குடியினர், அவர்களது மொழி மற்றும் வாழ்வியல் கூறுகளை பூமியின் சுழற்சியை சரியாக மதிப்பிட்டும், இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தும் தமது காலக் கணிப்பீட்டு முறைமைகளை உருவாக்கியவர்களாவர்.
                ''காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப் படுத்திக்கொண்டான்''
                 பொங்கல் திருநாளைத் தமிழர்கள் புதுநாள் என்றே அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முந்தைய  நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது - போகியது - போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது. எனவே போகி என்பது போக்கிய நாளானது. (பழைய ஆண்டு) புது நாள் என்பது புத்தாண்டாகவும் கொள்ளப்பட்டது. எனவே தமிழரின் புத்தாண்டு பழந்தமிழரின் காலக் கணிப்பீட்டுக்கு அமைவான தை மாதம் முதலாம் நாளிலேயே கொண்டாடப்பட வேண்டும்.

''தை'' முதல் நாளே தமிழன் புத்தாண்டு என்று கூறுவதற்கான சான்றுகள் :

               தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம். "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் தமிழர் முதுமொழியை "புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்" என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.
              தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு இன மக்களும் தத்தமக்குரிய புத்தாண்டை இளவேனில் காலத்திலேயே கொண்டாடுகின்றனர்.  அன்றைய தினமே தத்தமது புதுப் பணிகளையும், நற்செயல்களையும் தொடங்குகின்றனர். ஆனால் சித்திரை மாதத்தில் குறிப்பாகத் தமிழர்கள் எந்த நற்செயல்களையும் தொடங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
              தை மாத தொடக்க நாளை தமிழர்கள் தைப்பொங்கல் நாளாக காலம்  காலமாக கொண்டாடி வருகின்றனர். அதில் தோரணங்கள் கட்டுதல், புதுப் பானையில் புது நீர் அள்ளி பொங்கல் வைத்தல், பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என ஆரவாரம் செய்தல், பொங்கலை பரிமாறி உண்ணல், புத்தாடை அணிதல், முன்னோர்க்கு படையல் இடுதல், மாடுகளுக்கு உணவளித்தல், பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் தமிழர்களிடையே பழங்காலந்தொட்டு இருந்து வருகின்றன.
              இவை அனைத்தும் நீண்ட நெடுங்காலமாக யப்பானியர்களாலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான ஒரு வரலாற்றுப் பண்பாட்டு ஒருமைப்பாடு இருந்திருக்க வேண்டும் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
               இந்த தைப்பொங்கல் நாள் பண்டையக் காலம் தொட்டே சமயச்சார்பற்று அனைத்து தமிழர்களது  திருநாளாக விளங்குகின்றது. அதேப் போன்றே தை மாதம் முதல் நாள் தொடங்கும் தமிழ் புத்தாண்டு நாள்; உலகில் தமிழ் பேசும் அனைவரதும் புத்தாண்டு பிறப்பு நாள் என்பது தமிழ் அறிவியலாளர்களின் ஆய்வில்  முடிவாகியுள்ளது.
                 தமிழ்ப் புத்தாண்டு  பற்றிய வரலாற்றை தமிழ்  மக்களும், தமிழக அரசும் புரிந்துகொள்ளவேண்டும்.