Saturday, August 27, 2011

அன்னா ஹாசரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன். -அருந்ததி ராய்



அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம்ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம்இல்லவே இல்லை..
 
தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோஅவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதெனகருதினால்அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும்இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றிநீங்கள் என்ன கேள்வி யாரிடம்கேட்டிருந்தாலும்அந்த கேள்வி கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைதான் சரியென அவர் 'டிக்'செய்திருப்பார்கள் (வந்தே மாதரம்! (பாரத அன்னைக்கு ஜே! (இந்தியா என்றால் அன்னாஅன்னாஎன்றால் இந்தியா! (இந்தியாவுக்கு ஜே!
 முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காகமுற்றிலும் வெவ்வேறு வழிகளில்மாவோயிஸ்டுகளும் ஜன்லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால்கண்டிப்பாகச் சொல்ல முடியும்இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள்ஒருவர்,ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு,ஆயுதப் போராட்டத்தின் மூலம்கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார்மற்றொருவர் மேலிருந்துநகரம்சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டஇராணுவத்தைக் கொண்டுபுத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ்இரத்தம் சிந்தாதகாந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம்அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசுநிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ளஅனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)


2011
ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது "சாகும் வரை உண்ணாவிரதத்தைசிலநாட்கள் இருந்தார்அப்போது எழுந்த பெரும் ஊழல்கள்இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையேசிதைத்திருந்ததுஅதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்பஅரசு நமது சிவில் சமூகத்தால் "அன்னாஅணிஎன்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததுஅந்தக் குழுவை ஊழல்ஒழிப்பு சட்ட வரைவு கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டதுசில மாதங்கள் கடந்ததும்அரசு இந்த முயற்சியைக் கைவிட்டுபுதிய வரைவு மசோதாவைப் பார்லிமெண்டில் முன்வைத்ததுஅந்தவரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால்விவாதிப்பதற்கே தகுதியற்றதாக அதுஇருந்தது.
பிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் "சாகும்வரை போராட்ட"த்தை அன்னா ஹசாரேதுவங்கினார்அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவிதசட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரேகைது செய்யப்பட்டு சிறைச்சாலையில்அடைக்கப்பட்டார்விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பதுஎதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டம்ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டுஒருங்கிணைக்கப்பட்டதுஇந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள்,அன்னா விடுவிக்கப்பட்டார்ஆனால் புத்திச்சாதுரியத்துடன்அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேறமறுத்து விட்டார்விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய இடத்திலேயேகெளரவம்மிக்கவிருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார்தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும்உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறுதொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.அந்த மூன்று நாட்களும் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க,அன்னா அணியின் உறுப்பினர்கள் திகாரில் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும்காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள்அவர்கள்உள்ளேயிருந்து கொண்டு வந்த விடியோ செய்திகளைஅனைத்துத் தேசிய மற்றும் மற்றும் அனைத்துதனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியானஆடம்பரம்வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப் பட்டதில்லை.) இதற்கிடையில் தில்லி முனிசிபல்கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன்,சகதியாகக் கிடந்த ராம்லைலா மைதானத்தில் நாள் முழுக்க வேலைப் பார்த்துஅடுத்த வாரம் அரங்கேறப்போகும் தமாஷாவுக்குஅதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்முடிவே இல்லாமல் காத்திருந்துவிட்டுகிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும்அவதானித்து விட்டுஇந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன்,அன்னாவின் மூன்றாவது கட்ட "சாகும் வரை உண்ணாவிரதம்துவங்கியதுஉடனே பல தொலைக்காட்சிதொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரைஇந்தியா ஒன்றுதான்” என்று முழக்கமிடஆரம்பித்து விட்டார்கள்.
அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம்ஆனால் அவரது கோரிக்கைகளில்கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லைஅன்னாவின் கருத்துக்கு மாறாககாந்தி அதிகாரத்தைமையப்படுத்துவதற்கு எதிராக நின்றார்அதிகாரக் குவியலை எதிர்த்துஅதை அமத்தியத்துவப் படுத்தகாந்தி விரும்பினார்லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத அதிகாரம்மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம்இந்த வரைவுச்சட்டத்தின் படி,ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டுஒரு அதிகாரமையத்தை நிர்வகிப்பார்கள்அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு,அவர்கள் பிரதம மந்திரியில் இருந்துநீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்துபாராளுமன்றஉறுப்பினர்களிருந்துஅதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரைஅனைவரையும்கண்காணிக்கலாம்லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும்கண்காணிக்கவும்அவர்கள்மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டுலோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை.அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாகக் கணக்கில் அடங்காமல் சொத்துவைத்திருப்பவர்களையும்அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும்ஊழல் பேர்வழிகளையும்எதிர்கொள்ளும் வகையில் செயற்படும்அரசு நிர்வாகம் என்பதே இதற்காகதானே ஏற்படுத்தப்பட்டுள்ளது.இப்போது அரசு நடுத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்றுமற்றொரு சிறுகுழு ஆட்சியைலோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. ,இதன் மூலம்இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாகஇந்த லோக்பால் மசோதா அமைகிறது.
இந்த மசோதா பயன் தருமா இல்லை தராதா என்பதுநாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப்பொறுத்தே உள்ளதுஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையாஊழல் என்பதுவெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையாஅல்லது அதிகாரம் என்பது மிகச்சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில்ஊழல் என்பதுசமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டாஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப்பாருங்கள்பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில்வீதிகளில் கூவி விற்கும் சில்லறைவியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள்இருப்பினும் இந்தச் சில்லறைவியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையளர்களுக்கு,தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறிதான் செயற்பட வேண்டும்.அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார்என்று வைத்துக் கொள்ளுவோம்அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலாஎதிர்காலத்தில் இந்தச்சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதகளுக்கும் கொஞ்சம் பணம்கொடுக்க வேண்டுமாசாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பதுஅமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளதுஅப்படிச் செய்யாமல்அதற்குப்பதில்மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படிஞாயமாக இருக்கும்?
இதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும்அதற்கான உக்கிரமானதேசியவாதமும் கொடி அசைத்தலும்இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு போராட்டத்தில் இருந்தும்,உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும்அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன்வாங்கப்பட்டுள்ளதுஅவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்கா விட்டால்அவர்கள் உங்களை"உண்மையான இந்தியன் இல்லைஎன்று அடையாளப் படுத்துவர்கள்அது போலவே இந்த 24 மணிநேரஊடகங்களும்இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால்வெளியிடுவதற்கு உருப்படியான வேறுசெய்தியே இல்லாத போலமாயையை உருவாக்கி வருகின்றன.
இந்த உண்ணாவிரதம் ஐரம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தமும்வழங்கவில்லைசந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில்வழங்கப்பட்டிருக்கும் அப்ஸ்பா சட்டத்திற்கு எதிராக AFSPA (Armed Forces [Special Power] ACT) பத்துவருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப் பட்டாலும்தனதுஎதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே ஐரம் சர்மிளாஅவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல்கைவிட்டு விட்டதுஅணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரம் கணக்கான கிராமத்துவாசிகள்கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களேஅந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின்உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.
அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்ஐரம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்தமணிப்பூரிகள் மக்கள் இல்லையாஜகத்சிங்பூரிலும்கலிங்காநகரிலும்நியாம்கிரியிலும்பஸ்தாரிலும்,செய்தாபூரிலும்சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும்குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்குஎதிராகவும்திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையாபோபால் வாயு கசிவில்,முடமானவர்கள்இறந்தவர்கள்மக்கள் இல்லையாஅல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்டஅணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இலலையாதனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதெனஎதிர்ப்புத் தெரிவித்தநோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள்இல்லையாஅன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.
பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்தான் கோரும் லோக்பால் மசோதாபார்லிமெண்டில் விவாதத்திற்கு வைக்கப்பட்டுசட்டமாக மாற்றப்படா விட்டால்உணவருந்தாமலேயேஉயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கோரும்அன்னா என்ற 74 வயது மனிதனைஊடகத்தில் பார்க்கும்இந்த பார்வையாளர்கள்தான்அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர்எப்படி பசித்தவர்கள்புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ,அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கிஇந்த மக்களைபன்மடங்காக்கியது. "ஒரு பிலியன் குரல்கள் ஒலித்து விட்டன,” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.”
மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்உடனடி அவசர தேவையான மக்கள்விசயங்கள் குறித்துஇவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லைநமதுபக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோஅல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சைவேட்டை ஆபரேசனைக் குறித்தோஇவர் ஒரு வார்த்தை கூட உகுத்தது கிடையாதுசிங்கூர் பற்றியோ,நந்திகிராம் பற்றியோலால்கார்க் பற்றியோபோஸ்கோ பற்றியோவிவசாயிகள் போராட்டம் பற்றியோ,அல்லது விசேச பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைப் பற்றியோஇவர் எதுவும் பேசியதில்லை.மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின்திட்டங்கள் குறித்துஅவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
அவர் மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின்அரசியலை ஆதரித்தவர். 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களைத் நேரடியாக நிர்வகித்தகுஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமார புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்டமக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னாதனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும்மோடி மீதானதனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)
இந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும்சில அமைதியான பத்திரிகையாளர்கள்பத்திரிகையாளர்கள்செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள்ஆர் எஸ் எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள்,தற்போது அம்பலத்துக்கு இப்பத்திகையாளர்கள் மூலமாக வந்துள்ளதுஅன்னாவின் கிராம குழுமமானரலேகன் சித்தியில் பயின்றமுகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்வி படுகிறோம்அங்கோ கடந்த25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்தோ அல்லது கூட்டுறவு சொசைட்டியோ கிடையாது என்பதுதெரிகிறதுஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: “இந்த மகாத்தமா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும்ஒவ்வொருகிராமத்திலும்ஒரு சமார்ஒரு சுனார்ஒரு கும்ஹர் இருக்க வேண்டும்அவர்கள் தங்களது பாத்திரம்அறிந்துதங்களது வேலைகளைச் செய்ய வேண்டும்அப்படிச் செய்தால்தான்ஒரு கிராமம்சுயசார்புள்ளதாக இருக்கும்இதைதான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.”இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்என்றஇடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால்அதில் ஆச்சரியப்பட என்னஉள்ளது?
கோகோ கோலாவில் இருந்தும்லெக்மென் பிரதர்ஸில் இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசுசாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான்அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்றுகையெடுத்து நடத்தியவர்கள்அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும்மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம்போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்குமுன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியாபிரச்சாரத்திற்கு நன்கொடைஅளித்தவர்களில் அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான கம்பெனிகளும் பெளன்டேசன்களும்பலதுறைமுகங்களைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும்பல விசேச பொருளாதார பகுதிகளைக்கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும்அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய ரியல்எஸ்டேட் கம்பெனிகளும் பெளன்டேசன்களும் அடக்கம்பல கோடிக் கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தைநடத்துபவர்களே அந்த அவர்கள்அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில்ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித பாதகக் கிரிமினல் செயற்களில்ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள்இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன்பங்கெடுக்கிறார்கள்?
எப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில்வைத்துக் கொள்ளுங்கள்! 2G ஸ்பெட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக்மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமான போதுபல முக்கியமான கார்பரேசன்களும் மூத்தபத்திரிகையாளர்களும் காங்கிரஸ் மற்றும் நேச கட்சிகளின் மந்திரிகளும்காங்கிரஸ் மற்றும் பாரதியஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும் ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கானஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொது கருவூலத்தில் இருந்த கரந்து கொண்டு சென்றனர் என்பதுதெரிந்ததுஇவ்வளவு நாட்களிலும் முதன் முறையாக பத்திரிகையாளர்களும் பரிந்துரையாளர்களும்பெரும் அவமானப் பட்டார்கள்இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர்சிறைச்சாலையில்வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டுள்ளார்கள்இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப்பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும்இல்லையா?
அரசு தனது வழக்கமான கடமைகளைக் கைக்கழுவி வரும் போதுகார்பரேசன்களும் அரசு சாராஅமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம்மின்சார விநியோகம்போக்குவரத்து,தொலைத்தொடர்புசுரங்கம்சுகாதாரம்கல்விதங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது.கார்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்துள்ள காலகட்டமிதுஆகவே தற்போது இந்த கார்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாராஅமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக்கொள்ள முயலும்அதற்குப் பதில்தற்போது பரிந்துரைக்கப் பட்டுள்ள மசோதாஅவர்களை முழுவதுமாய்நிராகரித்து விட்டது.
தற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும்கேடுகெட்ட அரசியல்வாதிஎன்றும் அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும்,தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள்அவர்கள்உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்துஅரசை பொதுவெளியில்இருந்த இன்னும் அகற்ற வேண்டுமென கோருவதுகண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தைகொண்டுச் செல்வதற்காகதான்இதன் மூலம் இன்னும் தனியார் மயமாக்குதலை ஊக்குவிப்பதுவும்பொதுகட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கையான வளங்கைள இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பைமேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும்இதன் மூலமாக கார்பரேசன்ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுஅதற்குப் பரிந்துரைக்கும் கட்டணம் என்று பெயர் சூட்டப்படும்.
இந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவானவருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள்அவர்களை இன்னும் பராதிகளாக்கும் கொள்கைகளைவலுவாக்குவதின் மூலம்நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம்என்றுதானே பொருள்?
இந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மைமூலம் ஏற்பட்டுள்ளதுஇதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும்கோடிஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள்இவ்வமைப்பில் உள்ள எந்தவொருஜனநாயக அமைப்பும்சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளதுஅவர்கள் கொடியாற்றுவதைப்பார்த்து ஏமாந்து விடாதீர்கள்நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல்உக்கிரமாக இருக்கும்அதுதான் நமக்கு விதிக்கப் பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆங்கிலத்தில் : அருந்ததி ராய் (21/08/2011, தி இந்து)
தமிழில் : சொ.பிரபாகரன்

No comments:

Post a Comment